உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் பாசிகள் : பக்தர்கள் அருவெருப்பு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் பாசிகள் : பக்தர்கள் அருவெருப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் கடல் பாசிகள் ஒதுங்கி துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் அருவெருப்பு அடைந்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்த நிலையில், கடலில் வளரும் பாசிகள் தானாக பெயர்ந்து கரைக்கு ஒதுங்குவது வழக்கம். அதன்படி நேற்று அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான கடல் பாசிகள் ஒதுங்கி கிடந்தது. இப்பாசிகள் துர்நாற்றம் வீசியதால், பக்தர்கள் அருவெருப்புடன் நீராடி சென்றனர். இதனை நகராட்சி ஊழியர்கள் அகற்றினாலும், அடுத்தடுத்து கரை ஒதுங்குவதால், அகற்றி சுகாதாரம் பராமரிப்பது சவலாக உள்ளது. எனவே கூடுதலாக ஊழியர்களை நியமித்து, தொடர்ந்து கடல் பாசிகளை அகற்றிட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !