கருட தீர்த்தத்தில் காரமடை ரங்கநாதர் தெப்ப உற்சவம் கோலாகலம்
ADDED :1027 days ago
காரமடை : காரமடை ரங்கநாத சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
காரமடை ரங்கநாதர் கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்ற வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான கருட தீர்த்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக தெப்பத்தேர் உற்சவதிற்கு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கருட தீர்த்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.