நாகநாத சுவாமி கோவிலில் பாலாலய விழா துவக்கியது
காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி கிராமத்தில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலய விழா நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட நெடுங்காடு கொம்யூன் மேலகாசாகுடி கிராமத்தில் உள்ள அபிதகுஜாம்பிகை சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி மற்றும் மாரியம்மன் பிடாரியம்மன் ஏனைய பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய விழா நேற்று அனுக்கிர விக்னேஸ்வர பூஜையுடன் ஹோமம் துவக்கியது. இன்று காலை பாலாலயம் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் புஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் வேதமங்களங்களுடன் ஆலயத்தை சுற்றிவந்து நாகநாதசுவாமி. அம்பாள்,விநாயகர்,முருகன். நவகிராங்கள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில் விழாக்குழுவினர் இளங்கோவன். ராஜகுரு.கோவிந்தன். சாமிநாதன் உள்ளிட்ட கிராமமக்கள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.