ஸ்ரீ ரகு விஜய தீர்த்த சுவாமிகள் வெள்ளி தேர் ஊர்வலத்தில் பங்கேற்பு
ADDED :943 days ago
திருக்கோவிலூர்: மணம்பூண்டி மூலபிருந்தாவனத்தில் ஸ்ரீ கூடலி ஆர்ய அக்சோபிய தீர்த்த மடாதிபதி ஸ்ரீ ரகுவிஜய தீர்த்த சுவாமிகள் வெள்ளி தேர் ஊர்வலத்தில் பங்கேற்றார். ஷிமோகா அருகில் உள்ள ஸ்ரீ கூடலி ஆர்ய அக்சோபிய தீர்த்த மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ரகு விஜய தீர்த்த சுவாமிகள் நேற்று முன்தினம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மணம்பூண்டி ரகூத்தமர் மூல பிருந்தாவனத்திற்கு வருகை புரிந்தார். மாலை 6:00 மணிக்கு மூலபிருந்தாவனத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, வெள்ளி ரதத்தை வடம் பிடித்து இழுத்தார். பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாச்சாரிய சிம்மலகி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.