/
கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் நடை பயணம் வந்த ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கத்திற்கு வரவேற்பு
மேல்மலையனுார் நடை பயணம் வந்த ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கத்திற்கு வரவேற்பு
ADDED :1021 days ago
செஞ்சி: அங்காளம்மன் கோவிலுக்கு வருகை தந்த பாதயாத்திரை குழுவினருக்கு ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கத்தினர் வரவேற்பளித்தனர். விழுப்புரம் மாவட்ட ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கம் சார்பில் விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர், சிறுவாக்கூர், வீராமூர், பிலிவந்தி கிராமங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐந்தாம் ஆண்டாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு நடைபயணம் வந்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் தீனதயாளன், கிருஷ்ணன், சிவகுமார் வழிகாட்டுதலில் மேல்மலையனுார் வந்த குழுவினருக்கு மேல்மலையனுார் ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நிர்வாகிகள் பெருமாள், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் வரவேற்பளித்தனர். பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதில் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.