உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாணாதிராஜபுரம் கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வாணாதிராஜபுரம் கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: வானாதிராஜபுரம் கிராமத்தில்  நடந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா மோனாதி ராஜபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய  அறநிலை துறைக்கு சொந்தமான  இக்கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு  நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து கடந்த 15ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. நேற்று காலையுடன் 4ம் கால யாக பூஜைகள் நிறைவு பெற்று பூர்ணாஹூதி, யாத்ராதானம், மகாதீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து  கடங்கள்  புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம்  வந்து ஸ்ரீகோபால கிருஷ்ண பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் விமானங்களை வந்தடைந்தது. இதனை அடுத்து பட்டாச்சாரியார்கள் தடங்களில் இருந்த புனித நீரை கலசங்களில் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும்  கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக விழாவில் கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !