உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் உழவாரபணி

கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் உழவாரபணி

பாபநாசம்: பாபநாசம் அருகேயுள்ள நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் உடனருளும் கிரிசுந்தரி கோவிலில், குடந்தை திருநாவுக்கரசர் உழவார திருக்கூட்டத்தினர் சார்பில், உழவார பணி நடந்தது. கோவில் வளாகம், பிரகாரம், விஸ்வமர மேடை, நந்தவனம் ஆகிய பகுதிகளில், மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் ஒரு நாள் முழுவதும் உழவார பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் உழவார திருக்கூட்ட நிர்வாகிகள் வீரமணி, சக்திவேல், அப்பர் வாரவழிபாடு முனைவர் திருசிற்றம்பலம், கலாநிதி உள்பட, 90 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் கட்டளை சன்னிதானம் மீனாட்சி சுந்தரம் அருளாசியும், பிரசாதம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !