உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒப்பிலியப்பன் கோவிலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு பஸ் போக்குவரத்து!

ஒப்பிலியப்பன் கோவிலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு பஸ் போக்குவரத்து!

கும்பகோணம்: தமிழகத்தில் பல்வேறு புதிய வழித்தடங்களுக்கு, 13ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழால் பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார். அதில் தமிழக திருப்பதி என, அழைக்கப்படும் திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலிலிருந்து, ஸ்ரீரங்கத்துக்கு நேரடியாக செல்லும் வழித்தடமும் ஒன்றாகும். தினசரி இரண்டு முறை ஒப்பிலியப்பன் கோவிலிலிருந்து, ஸ்ரீரங்கத்திற்கு பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. தினசரி காலை, எட்டு மணிக்கு ஒப்பிலியப்பன் கோவிலிலிருந்து புறப்படும் பஸ் பகல், 12.30 மணிக்கு ஸ்ரீரங்கம் சென்றடைகிறது.அங்கிருந்து பகல், ஒரு மணிக்கு புறப்படும் பஸ் ஒப்பிலியப்பன் கோவிலுக்கு மாலை, 5.15 மணிக்கு வந்தடைகிறது. பின் மாலை, 5.30 மணிக்கு ஒப்பிலியப்பன் கோவிலிலிருந்து பஸ் புறப்பட்டு இரவு, 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சென்றடைகிறது. இரவு, 10.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கும்பகோணத்துக்கு இரவு இரண்டு மணிக்கு வந்தடைகிறது. இந்த பஸ் போக்குவரத்தை, 13ம் தேதி கிளை மேலாளர் மார்த்தாண்டவர்மன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் தேப்பெருமாநல்லூர் ராஜா, ஆலயப்பணியாளர்கள் என பல பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !