உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி பூஜை இல்லை

முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி பூஜை இல்லை

கூடலூர்: முதுமலையில், யானைகளால் ஆண்டுதோறும் நடத்தப்படும், விநாயகர் விசர்ஜன பூஜை, கோர்ட் உத்தரவால் நேற்று நடைபெறவில்லை. நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள மூன்று முகாம்களில் 14 ஆண் யானைகள், ஏழு பெண் யானைகள், நான்கு மக்னா மற்றும் குட்டிகள் என, மொத்தம் 25 யானைகள் உள்ளன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது, மாலை 6:00 மணியளவில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இதில் "கஜமுகனுக்கு குட்டி யானைகள் மணி அடித்து பூஜை செய்வது, சிறப்பு அம்சம். இதை கண்டு ரசிக்க, சுற்றுலா பயணிகள் பெருமளவு திரள்வர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கடந்த ஜூலை மாதம் 25 முதல், முதுமலை காப்பகம் மூடப்பட்டுள்ளது; சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி இல்லை. எனினும், விநாயகர் சதுர்த்தி விழா மட்டும் நடைபெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள்காட்டி, "விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறாது என, வனத் துறையினர் அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !