தினமலர் செய்தி எதிரொலி திருப்பரங்குன்றம் தேரில் குதிரை பொம்மை சீரமைப்பு
ADDED :983 days ago
திருப்பரங்குன்றம்: தினமலர் செய்தி எதிரொலியாக குன்றத்து தேரில் சேதமடைந்த குதிரை பொம்மை சீரமைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு எதிரில் கோயிலுக்கு சொந்தமான பெரிய வைர தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை கிரிவலம் வரும் இந்த தேர் ஏப். 9ல் பவனி வர உள்ளது. இந்த பெரிய வைரத் தேரில் ஏராளமான சுவாமி சிலைகள், குதிரை பொம்மைகள் உள்ளன. அதில் முன்பகுதியில் உள்ள ஒரு குதிரை பொம்மை கடந்தாண்டு தேரோட்டத்தின்போது சேதமடைந்தது. இதுகுறித்து தினமலர் செய்தி வெயிட்டது.செய்தியின் எதிரொலியாக மயிலாடுதுறையில் இருந்து ஸ்தபதி நல்ல குமார் வரவழைக்கப்பட்டு சேதுமடைந்த குதிரை பொம்மை சீரமைக்கப்பட்டது. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.