ஈஸ்டர் திருவிழா : கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
ADDED :916 days ago
காரைக்குடி: காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நடந்தது. காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் நடந்த திருப்பலியில். பங்குத்தந்தை எட்வின் ராயன் மற்றும் உதவி பங்கு தந்தை ஜேம்ஸ்ராஜா, மரிய அந்தோணி ராஜ் மற்றும் சிறப்பு விருந்தினராக திருச்சி மறைமாவட்டம் சேசுராஜ் மறையுரை ஆற்றினர். விடியல் இளையோர் இயக்கத்தினர் இயேசுவின் உயிர்ப்பு காட்சிகளை சிறப்பாக செய்திருந்தனர். பங்குப் பேரவை செயலர் முனியப்பன் நன்றி கூறினார். ஈஸ்டர் உயிர்ப்பு திருவிழா முன்னிட்டு சிவகங்கை அலங்கார அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.