உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ஈயம் கொளுத்தும் பணி

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஈயம் கொளுத்தும் பணி

காளஹஸ்தி: திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ஈயம் கொளுத்தும் பணி தொடங்கியது.  சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான இந்தப் பணிகளை அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு தொடங்கி வைத்தார்.  இது குறித்து அவர் கூறுகையில்  கோவிலுக்குள் கற்களுக்கு இடையில் விரிசல் ஏற்படுவதால் எதிர்காலத்தை மனதில் வைத்து ஈயத்தை காய்த்து விரிசல்களில் ஊற்றி வருவதாக தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் கோயில் செயற்பொறியாளர் முரளிதர், துணை பொறியாளர் சீனிவாசலு, கோயில் கண்காணிப்பாளர்கள் நாகபூஷண யாதவ், சுதர்சன் ரெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !