அருணாசல ஈஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்: சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம்
ADDED :946 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே பேட்டையில் உள்ள பச்சைநாயகி அம்மன் சமேத அருணாசல ஈஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக நடந்தது. இதில் ஸ்கந்த குருவித்யாலம் முதல்வர் சிவாச்சாரியர் ராஜா தலைமையில் யாக பூஜை, சங்காபிஷேகம் நடந்தது. இதில் அர்ச்சகர் கணபதி சுப்பிரமணியன் முன்னிலையில் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அருணாசல ஈஸ்வரர் டிரஸ்ட் நிர்வாகிகள் ஜெகதீசன், செந்தில்குமார், ராஜேஷ் கண்ணா, கணக்கர் சிவகணேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் பட்டர்கள் வசந்த், சுவாமிநாதன் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.