வரசித்தி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
ADDED :946 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று முன்தினம் இரவு, 11: 27 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதில், உலக நன்மை வேண்டி குரு பகவானுக்கு குரு பரிகார ஹோமம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.