குன்னத்தூர் மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :945 days ago
அன்னூர்: குன்னத்தூர், வரசித்தி விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவிலில், 106 வது ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 11ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 18ம் தேதி வரை தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 19ம் தேதி கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடந்தது. இதையடுத்து 23ம் தேதி வரை தினமும் இரவு பக்தர்கள் பூவோடு உடன் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மதியம் அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்தி வருதல், மாலையில் மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. வரும் 26ம் தேதி இரவு அபிநயா குழுவின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.