6 மாதங்களுக்கு பிறகு கேதார்நாத் கோயில் நடை திறப்பு : பக்தர்கள் பரவசம்
கேதார்நாத் : உத்தராகாண்ட் மாநிலம், கேதார்நாத் கோயில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றான கேதர்நாத் கோயில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில், கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக கோயில் கடந்த அக்டோபர் 21ம் தேதி மூடப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேதர்நாத் கோயில் இன்று திறக்கப்பட்டது. கோயிலை திறக்கப்படுவதற்கு முன், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை கோவிலில் பால் போக், மகா அபிஷேகம், ருத்ரா அபிஷேகம், சிவ அஷ்டோத்திரம், சிவ சகஸ்கரநாமம், சிவ நாமாவளி, சிவ பூஜைகளும், அர்ச்சனைகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இருப்பினும் யாத்திரை செல்லும் பாதையில் கடுமையான பனிப்பொழி இருப்பதால் முன்பதிவை உத்தரகாண்ட் அரசு நிறுத்தி வைத்துள்ளது.