சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :902 days ago
பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெருமாள் பூதேவி ஸ்ரீதேவிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வான பெருமாள் மருதா ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ல் நடைபெறுகிறது. இதற்காக நாளை மறுநாள் சித்தரேவில் இருந்து பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். இதனைத் தொடர்ந்து தசாவதாரம் யாதவர்கள் எதிர்சேவை, மண்டகப்படிகளில் தங்குதல் ஆகிய வைபவங்கள் நடைபெற உள்ளன.