பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
ADDED :888 days ago
கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ செங்கோதை, பூங்கோதை அம்மன் சமேத பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் அரங்கநாதர் ஏழுந்தருளி அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் புடை சூழ சப்பரம் மற்றும் திருத்தேர் திருக்கோவிலை சுற்றி பவனி வந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.