கொடையில் சத்ய சாய்பாபாவின் அன்னை ஈஸ்வரம்மா தினம்
ADDED :889 days ago
கொடைக்கானல்; கொடைக்கானல் சாய் சுருதியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அருள் அன்னை ஈஸ்வரம்மா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சத்திய நாராயண விருத்தம், கல்ப பூஜை ,பக்தி பிரசாதம், சாய் யுவாம் ருதம், மகா மங்கள ஆரத்தி நடந்தது. ஓம்காரம், சுப்ரபாதம் ஆகிய நடந்தன. மகா நாராயண சேவையில் வஸ்தரதானம் ஏராளமானவர்க்கு வழங்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு சத்திய சாய் சேவா நிறுவனத் தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் விஜய கிருஷ்ணா, டி.வி.எஸ்., குழு தலைவர் மல்லிகா சீனிவாசன் உட்பட சத்திய சாய் சேவா நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.