ஒரு கடவுளை மட்டும் வணங்காததால் ஏற்படும் குழப்பத்துக்கு தீர்வு என்ன?
ADDED :5158 days ago
கடவுள் ஒருவரே. ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் நம் வசதிக்காகவே. ஒரு ஊரில் பல பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக ஆற்றுக்குச் சென்றனர். ஆளுக்கொரு நிறம் கொண்ட பிளாஸ்டிக் குடங்களை கையில் வைத்திருந்தனர். ஒன்றாக ஆற்றில் ஓடிய நீரே அக்குடங்களில் நிரம்பியது. பச்சை, சிவப்பு, நீலம் என்று எத்தனை நிறம் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் இருக்கும் நீர் ஒன்று தானே. அதுபோல, பலவித வடிவம், பெயர்களில் குறிப்பிட்டாலும் உண்மையில் கடவுள் ஒருவர் மட்டும் தான். அவரவர் மனதிற்குப் பிடித்த தெய்வத்தை வழிபடுவதே போதுமானது. குழப்பம் தேவையில்லை.