உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூப்பல்லக்கில் வலம் வந்த சித்தரேவு வரதராஜ பெருமாள்

பூப்பல்லக்கில் வலம் வந்த சித்தரேவு வரதராஜ பெருமாள்

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் ஏழாம் நாளான இன்று பூப்பல்லக்கில் சித்தரேவில் வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமானை தரிசித்தனர். தொடர்ந்து அன்னபட்சி வாகனத்தில் மஞ்சள் நீராடி சித்தரேவு கோயிலை வந்து அடைந்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கனக லட்சுமி, தலைமை அர்ச்சகர் ராஜ நரசிம்ம ஐயங்கார், விழா குழுவைச் சேர்ந்த முருகன், மூர்த்தி, கண்ணன், ராமுவேல், புகழேந்தி, சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !