பசு, பூமி, நதி, நாடு என்று அனைத்தையும் பெண்ணாக வணங்குவது ஏன்?
ADDED :5158 days ago
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பது முன்னோர் வாக்கு. அந்த தாய்மையை பசு, பூமி, நதி, நாடு, மொழி ஆகியவற்றில் நாம் காண்கிறோம். பால் கொடுக்கும் பசுவை கோமாதா என வழிபடுகிறோம். பூமியை திருமாலின் மனைவியரில் ஒருத்தியாக பூமாதேவி என்று போற்றுகிறோம். நீர் இல்லாமல் நம் வாழ்வு இல்லை. அதனால், கங்கை, காவிரி போன்ற நதிகளை தெய்வமாக மதிக்கிறோம். தாய்நாடு, தாய்மொழி என்று சொல்வது கூட, தாயைப் போல் அவற்றை மதிக்க வேண்டும் என்பதால் தான்.