உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாட்டு கேட்டு தூங்குபவர்

பாட்டு கேட்டு தூங்குபவர்

வைத்தீஸ்வரன் கோயிலில் வீற்றிருக்கும் முத்துக்குமாரசுவாமிக்கு (முருகன்) தினமும் இரவு 9 மணிக்கு புழுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம் சாத்துவர். பால், பழம், பால்சோறு படைத்து தீபாராதனை செய்வர். இந்த தரிசனத்திற்கு புழுகு காப்புத் தரிசனம் என்று பெயர். தீபாராதனையின் போது கோயில் ஓதுவார் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் தாலாட்டுப்பாட்டு பாடுவார். அதன்பின்னரே, முருகன் தூங்கச் செல்வதாக ஐதீகம். இதன்பின், மூலவரான சிவன் வைத்தியநாதருக்கும், அம்பிகை தையல்நாயகிக்கும் அர்த்தஜாமபூஜை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !