உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை சாமிகள்

கோட்டை சாமிகள்

புதுக்கோட்டையிலிருந்து 17கி.மீ., தூரத்தில் உள்ளது திருமயம். இங்கு சிவபெருமான் சத்தியகிரீஸ்வரராகவும், பெருமாள் சத்தியமூர்த்தியாகவும் அருகருகே கோயில் கொண்டுள்ளனர். சத்தியத்தை தமிழில் மெய் என்று குறிப்பிடுவர். சத்தியவடிவமான இறைவன் அருளும் தலம் என்பதால் திருமெய்யம் என்று அழைக்கப் பட்டது. இப்பெயரே திருமயம் என்று மருவி விட்டது. இங்குள்ள வட்டவடிவ கோட்டைக்கு பத்மகோட்டை என்பர். இதற்கு மூன்று வாசல்கள் உண்டு. வடக்குவாசலில் பைரவரும், தெற்குவாசலில் கருப்பண்ண சுவாமியும், தென்கிழக்கு வாசலில் விநாயகர், அனுமன், சக்தியும் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !