உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் துவக்கம்

மதுரை  : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தின் முதல் நாளில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி, அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். கடந்த மாதம் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடந்தது. மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா நேற்று (மே 24ல்) துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மாலை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி புது மண்டபம் சென்று பின்னர் 4 சித்திரை வீதிகளில் வலம் வருவார். ஜூன் 5 காலையில் திருஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்களின் நான்கு ஆவணி மூலவீதி புறப்பாடும் நடக்கிறது. அன்றிரவு 8:00 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளிலும் வலம் வருகிறார். மே 24 முதல் ஜூன் 5 வரை வைகாசி வசந்த உற்ஸவம் நடப்பதால் உபய தங்கரதம், உபயதிருக்கல்யாணம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !