சமயநல்லூரில் வைகாசி பொங்கல் விழா
ADDED :1069 days ago
வாடிப்பட்டி: சமயநல்லூரில் இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயில் 28ம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா மே 21.,ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன், இதர தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். முத்து பரப்புதல், உற்ஸவ அம்மனுக்கு அலங்காரம், பூச்சொரிதல், குத்துவிளக்கு பூஜை நடந்தது. மே.,28ல் பொதுமக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், சக்தி கரகம், மாவிளக்கு எடுத்து உற்ஸவ அம்மன் நகர் வீதி உலா நடந்தது. நேற்று காலை பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.