சனி வழிபாட்டு நாள்; சங்கடம் தீர்ப்பார் சனீஸ்வரர்.. ஆஞ்சநேயரை வழிபடுங்க!
சனீஸ்வரருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்று பெயர்கள் உண்டு. இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சூரியனுக்கும், சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். எமனும், புனிதநதியான யமுனை இருவரும் உடன்பிறந்தவர்கள். தொட்டிலில் குழந்தையாகக் கிடந்த போதே, தன் இரு கைகளைக் குவித்து சிவனை வணங்கியதால், சிவபிரியன் என்று பெயர் பெற்றார். காசியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, பூஜை செய்ததால் நவக்கிரகங்களில் ஒருவராகும் பாக்கியம் பெற்றார். முற்பிறவியில் நாம் செய்த பாவங்களுக்குத் தண்டனை அளித்து, அதன்மூலம் பாவநிவர்த்தி அளிக்கிறார். பிதுர்பூஜை செய்பவர்களை சனீஸ்வரர் துன்புறுத்துவதில்லை என நாரதர் கூறியுள்ளார். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் சனியின் கெடுபலன் நீங்கி நன்மை உண்டாகும். இன்று அனுமனை வழிபட வெற்றி கிடைக்கும். பெருமாளை வழிபட கெடுபலன் நீங்கி நன்மை உண்டாகும்.