ஆனி அமாவாசை ; செல்வச்செழிப்புடன் வாழ வீட்டில் குலதெய்வத்தை வழிபடுங்க
ADDED :908 days ago
ஒவ்வொரு மனிதனும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதற்காக பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்தனர். தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர்கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர். இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்வது குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன் தரும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இன்று வீட்டில் குலதெய்வத்தை வழிபட செல்வச்செழிப்புடன் வாழலாம்.