நாரதருக்கு உலோக சிலை
ADDED :5154 days ago
பிரம்மாவின் மகனான நாரதர், முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அருகில் குடைவரை கருவறையில் காட்சி தருகிறார். ஆனால், அவருக்கு உலோகச் சிலைகள் இல்லை. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன்கோயிலில் நாரதருக்கு உலோகச்சிலை உள்ளது. விழாக்காலங்களில் இந்தச்சிலை ஊர்வலமாக எடுத்து வரப்படும். படைக்கும் தொழில் காரணமாக ஆணவம் கொண்ட பிரம்மாவின் தலையை சிவபெருமான் கொய்து விட்டார். தன் தந்தை பிரம்மாவுக்காக, சிவபெருமானிடம் பரிந்து பேசிய நாரதருக்கு சிவநிந்தனை உண்டானது. தன் பாவம் தீர, அவர் விராலிமலை முருகப்பெருமானை வழிபட வந்து இங்கு தங்கினார்.