சாவித்ரி விரதம் கல்பம்: காமாட்சி அம்மனை வழிபட ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்
ADDED :905 days ago
கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. சாவித்ரி ஆனிமாத அமாவாசையிலிருந்து மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டாள். இந்த காலத்தினை சாவித்ரி விரத கல்பம் என்கின்றனர். இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம் என்று அழைக்கப்படுகிறது. சாவித்திரி இந்த விரதம் இருந்து இறந்த தன் கணவனை யமதர்மனிடம் வேண்டி மீட்டாள். இத்திருநாளில் பெண்கள் நோன்பு இருந்து வழிபட்டால் கணவனின் ஆயுள் அதிகரிக்கும். பெண்கள் காமாட்சி அம்மனை வழிபட குடும்ப சிக்கல்கள் தீரும். ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்.