பயணம் இனிதாக ...
ADDED :5154 days ago
வாகனங்களில் பயணம் செல்வது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதேநேரம் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வெளியில் சென்று விட்டு பத்திரமாக வீடு திரும்பவும், பயணம் இனிதாக அமையவும் எளிய பரிகாரம் ஒன்றுண்டு. வெளியில் கிளம்பும்போது, ஹரிஓம் என்ற மந்திரத்தை ஜெபித்தபிறகு கிளம்ப வேண்டும். இம்மந்திர சக்தி கவசம் போல உங்களைப் பாதுகாக்கும். கந்தரனுபூதியில் இருக்கும் நிறைவுப்பாடலான உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்ற பாடலை பாராயணம் செய்து விட்டும் வீட்டிலிருந்து கிளம்பலாம். இதனால், நாம் செல்லும் இடமெல்லாம் முருகப்பெருமான் கூடவே வந்து காத்தருள்வார்.