சதுர்த்தி விரதம்: சங்கடங்கள் யாவும் நீங்க விநாயகரை வழிபடுங்க!
ADDED :903 days ago
சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் குழப்பங்கள் அகலும், வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள், கிரக தோஷங்கள் விலகும், சங்கடங்கள் நீங்கும். காரிய தடை நீங்கும். சகல விதமான செளபாக்கியங்களும் ஏற்படும். விநாயகப் பெருமானின் அருளை பெற சிறந்தது சதுர்த்தி விரதம். சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதம் என்பதால் சங்கட ஹர சதுர்த்தி எனப்பட்டது. அருகம்புல், வெள்ளெருக்கு மாலை விநாயகருக்கு சாற்றி வழிபடுவது சிறப்பு. இந்நந்நாளில் விநாயகரை உள்ளன்புடன் வழிபட்டு நலன்கள் பல பெறுவோம்.