உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு: மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு: மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார்பட்டி வாராஹி அம்மன் கோவிலில் இன்று(23ம் தேதி) பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு மஞ்சள் அரைத்தும், தேங்காயில் விளக்கேற்றியும் வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !