புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி அணிவது ஏன்?
ADDED :5154 days ago
மஞ்சள் ஒரு மங்கலப்பொருள், சுபத்தின் அடையாளம். லட்சுமி கடாட்சம்உடையது. புத்தாடை அணியும் நேரம் சுபமாக அமைவதுடன் செல்வ வளமும் பெருகட்டும் என்று இந்த பழக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். மஞ்சள் கிருமி நாசினியும் கூட. புதுத்துணியில் கிருமிகள் இருக்குமானால் விலகட்டுமே என்றும் வைத்திருக்கலாம்.