திருவாசகம் பாடலில் இடம் பெற்ற தலங்கள்
ADDED :989 days ago
திருவாசகம் பாடலில் இடம் பெற்ற தலங்கள் 43. இதில் ஏழு முக்கியமானவை
* மாணிக்கவாசகர் அவதரித்த தலம் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர்.
* இவருக்காக நரிகளை பரிகளாக்கி அனுப்பியவர் மதுரை சொக்கநாதர்.
* புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலில் சிவபெருமானே குருவாக காட்சி அளித்தார்.
* ராமநாதபுரம் உத்தர கோசமங்கை மாணிக்கவாசகரின் முற்பிறவியோடு தொடர்புடையது.
* செங்கல்பட்டு அருகிலுள்ள திருக்கழுக்குன்றம் சிவபெருமான் இரண்டாம் முறை குருநாதராக காட்சிஅளித்தார்.
* திருவண்ணாமலையில் தங்கிய காலத்தை திருவெம்பாவை பாடலை பாடினார்.
* சிதம்பரத்தில் இறுதிக்காலத்தை கழித்தார். பவுத்தர்களை வாதத்தில் வென்றார், பேசும் திறனற்ற இலங்கை இளவரசியை பேச வைத்தார்.