சர்ப்ப தோஷத்திற்கு தீர்வு
ADDED :978 days ago
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான தாமிரபரணியில் நீராடி மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்கும்படி உபதேசித்தார். தன் இருப்பிடமான விந்தியமலையை விட்டு தெற்கு நோக்கி வந்த கார்கோடன் தாமிரபரணி கரையில் தவத்தில் ஆழ்ந்தான். மகாவிஷ்ணுவும் காட்சியளித்து ஞானம் அளித்தார். அந்த இடமே திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ‘கோடக நல்லுார்’ எனப் பெயர் பெற்றது. இங்குள்ள பெருமாளுக்கு பெரியபிரான் என்பது திருநாமம். இவரை தரிசித்தால் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது தோஷம் விலகும்.