உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளியூர் சாமியார் பொத்தையில் குரு பூர்ணிமா சிறப்பு பூஜை

வள்ளியூர் சாமியார் பொத்தையில் குரு பூர்ணிமா சிறப்பு பூஜை

வள்ளியூர்: வள்ளியூர் சாமியார் பொத்தையில் குரு பூர்ணிமா சிறப்பு பூஜை நடந்தது.

வள்ளியூர் சாமியார் பொத்தையில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சூட்டு பொத்தை அடிவாரத்தில் கிரிவலம் நடந்தது. 6 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள வன விநாயகருக்கு பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு ஸ்ரீபுரம் சித்ர கூடத்தில் குரு பூர்ணிமா சிறப்பு பஜனை நடந்தது. இரவு குரு பூர்ணிமா சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை முத்துகிருஷ்ண மிஷன் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நாளை (6 ம் தேதி), வரும் 21ம் தேதி களில் மலை அடி வாரத்தில் உள்ள வன வினாயகருக்கு மாலை 6 மணிக்கு சங்கடஹரசதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !