சித்தம் போக்கு சிவன் போக்கு என்று சொல்வது ஏன்?
ADDED :5151 days ago
சித்தத்தை சிவன்பால் வைத்து மெய்ஞ்ஞான வழியில் செல்பவரே சித்தர். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றாலும் உயர்நிலை அடைந்து விட்ட ஞானிகள். அருள்வயப்பட்ட இவர்கள் போகின்ற போக்கெல்லாம் (வழியெல்லாம்) சிவநெறியே ஆகும்.