சிங்கத்தையே தூக்கும் பறவை
ADDED :5151 days ago
ஒரு காலத்தில் சிம்புள் என்ற பறவை இருந்தது. அது சிங்கத்தையே அலாக்காக தூக்கிச் சென்று விடும் பலம் கொண்டது. காட்டுப்பாதையில் வந்த மனிதனை சிங்கம் ஒன்று துரத்திய போது, சிம்புள் பறந்து வந்து தூக்கிச் சென்றது போல, முன்வினை என்னும் சிங்கத்திடமிருந்து இறை அருள் என்னைக் காத்தது என்னும் பொருளில், சிங்கத்தை ஒத்து எனைப் பாயவரும் வினையினைச் சேதிக்க வரும் சிம்புளே, என்று தாயுமானவர்
பாடினார். விதியை வெல்ல கடவுள் அருள் ஒன்றே துணை என இப்பாடல் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.