அவிநாசியில் ஆனி கார்த்திகை; விளக்கு பூஜை
ADDED :892 days ago
அவிநாசி: அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி மயில் வாகனத்தில் குமர பெருமான் நான்கு ரத திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அவிநாசி அடுத்த கருக்கம்பாளையத்தில் ஸ்ரீ தன்னாசியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம்,சின்னேரி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்கம்பாளையம் கணேசபுரம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தன்னாசியப்ப சுவாமி உள்ளிட்ட பரிவார தேவதைகள் கோவிலில், கடந்த ஐந்தாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மண்டல பூஜைகளில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மஹா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.