உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முதல் அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து சுவாமி தரிசனம்

ஆடி முதல் அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடி முதல் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இக்கோயிலில் ஆனி பிரதோஷம் மற்றும் ஆடி மாதம் முதல் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை மலை அடிவாரத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயில் கொளுத்திய நிலையிலும் மதியம் 2:00 மணி வரை சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று ஆடி முதல் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.  போதிய மழையின்றி வனப்பகுதி வறண்டு கிடக்கும் நிலையில், கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு உடனடியாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மலையில் கோயில் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் மடங்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆடி முதல் அமாவாசை நாளான இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் சரக வனத்துறையினர் மலையில் வழித்தட பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !