உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டுதல் நிறைவேறணுமா

வேண்டுதல் நிறைவேறணுமா


* விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் சிவனுடைய அம்சம். அதனால் தான் சிங்கத்திற்கு பதில் நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்மனுக்குரிய அபிேஷக தீர்த்தத்தை சாப்பிட்டு வர கண்நோய் குணமாகும்.
* மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மனின் அபிேஷக தீர்த்தம் அம்மைநோய் வந்தவர்களுக்கு அருமருந்தாக அமைந்துள்ளது.
* தேனி பெரியகுளம் கவுமாரியம்மன்  கோயிலில் விவசாயம் செழிக்க தானியங்கள் காய்கறிகள் கனிகளை படைக்கப்படுகின்றனர்.
* திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் கொடிமரத்தில் உப்பு மஞ்சள் சமர்ப்பித்தால் வேண்டுதல் நிறைவேறுகிறது.
* காரைக்குடி முத்துபட்டினம் மீனாட்சிபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தக்காளி பழச்சாறு அபிேஷகம் செய்தால் உடல் இளமை பொலிவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !