பரமக்குடி அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ADDED :845 days ago
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி பூஜை கோலாகலமாக நடந்தது. பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி பாலபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் கூழ் காய்ச்சி வழங்கினர். பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பரமக்குடி மீனாட்சி அம்மன், சவுந்தரவல்லி தாயார், விசாலாட்சி அம்மன், சந்தன மாரியம்மன், வராகி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.