உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி முதல் வெள்ளி; காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி முதல் வெள்ளி; காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேற்று பலர் பொங்கல் வைத்தும் மா விலக்கு எடுத்தும், அக்னி சட்டி செலுத்தியும் முடி காணிக்கை செலுத்தினர். சிறப்பு தரிசனம், பொது தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !