/
கோயில்கள் செய்திகள் / அழகெல்லாம் முருகனே.. ஆடிச்செவ்வாய் .. முருகன் கோயில்களில் அலைமேதும் பக்தர்கள்
அழகெல்லாம் முருகனே.. ஆடிச்செவ்வாய் .. முருகன் கோயில்களில் அலைமேதும் பக்தர்கள்
ADDED :812 days ago
சென்னை : முருகப்பெருமானின் அறுபடை வீடு, சென்னை வடபழநி ஆண்டவர், மருதமலை கோயில்களில் ஆடிச்செவ்வாயை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடிச்செவ்வாய் விரதம் அம்பிகை, முருகனுக்குரிய விரதமாகும். இன்று செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். ஆடி இரண்டாம் செவ்வாயான இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மருதமலை, வடபழநி ஆண்டவர் என முக்கிய முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வடபழநி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.