உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் நினைத்ததை முடித்து காட்டிய ராமானுஜர் : கள்ளழகர் கோயில் தங்ககோபுரத்தில் சுவாரஸ்யம்

ஆண்டாள் நினைத்ததை முடித்து காட்டிய ராமானுஜர் : கள்ளழகர் கோயில் தங்ககோபுரத்தில் சுவாரஸ்யம்

அழகர்கோவில் : மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஸ்ரீவி., ஆண்டாள் செய்ய நினைத்ததை ராமானுஜர் செய்து முடித்தார். தங்க விமானத்தில் இது தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இக்கோயிலில் மூலவர் சுந்தரராஜப்பெருமாள் சன்னதிக்கு மேல் உள்ள தங்கவிமானம் பாண்டிய மன்னன் வழங்கிய பொற்கிழியை கொண்டு பெரியாழ்வார் நிறுவினார் என்பது வரலாறு. கருவறை மீது எழுப்பபட்ட சோமசந்த விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதனை ஆண்டாள் நாச்சியார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் உள்ளிட்டோர் திருப்பணிகள் செய்து காத்தனர். 2010ல் இக்கோபுரத்திற்கு ஆந்திரா நாராயண ராமானுஜர் சின்ன ஜீயர் சுவாமி, காணிக்கையாக 26 கிலோ தங்கம் தந்தார்.இதுகுறித்து மாதவன் பட்டர் கூறியதாவது: கள்ளழகர் கோயில் 108 திவ்யதேசங்களில் 93வது ஆகும். தென்திருமலை என போற்றப்படும் இங்கு அமைந்துள்ள தங்கவிமானத்திற்கு ஆண்டாள் 100 தங்க பாத்திரங்களில் அக்காரஅடிசில் (1 லி., பாலை 100 மில்லியாக காய்ச்சி செய்யும் பலகாரம்) படைப்பதாக திருப்பாவையில் பாடியுள்ளார். ஆனால் அவர் செய்ய காலம் கனியாததால் ராமானுஜர் அப்பணியை செய்தார். இதன் பின் ஸ்ரீவி., சென்ற ராமானுஜரை கண்டதும் சுவாமி ஆண்டாள் எழுந்து வந்து வரவேற்றார். இது குறித்து விமானத்தின் உட்பகுதியில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. இங்கு வந்து வணங்கினால் முன் ஜென்ம பாவங்களும், மூதாதையர் செய்த பாவங்களும் அழியும் என்பது ஐதீகம். பரமபதத்தில் இருந்து மக்களுக்கு அருள் புரிய வந்ததால் பரமசுவாமி என்று கள்ளழகர் போற்றப்படுகிறார். பூமிக்கு கருடவாகனத்தில் சுவாமி எழுந்தருளி வந்ததால் விமானத்தில் கருடவாகனத்தில் வரும் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !