கூடலுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :801 days ago
கூடலுார்: ஆடி வெள்ளி இரண்டாவது வாரத்தை முன்னிட்டு கூடலுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வளையல் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல், கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. மகளிர் பக்தர்கள் குழு கூட்டு வழிபாடு நடத்தினர். பஜனை பாடல்கள் பாடினர். துர்க்கை அம்மன் கோயில், காளியம்மன் கோயில், கூடல் சுந்தரவேலவர் கோயில், வீருகண்ணம்மாள் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.