ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ADDED :832 days ago
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் ஆடி வெள்ளி மூன்றாவது வாரத்தை முன்னிட்டு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராஜீவ்காந்தி நகர் ஓம் சக்தி கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து காளியம்மன் கோயிலில் இருந்து மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று ஓம் சக்தி கோயிலை அடைந்தனர். காளியம்மன் கோயிலில் மலர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பெண்கள் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர். பொங்கல், கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.