வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை
ADDED :847 days ago
வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று 48ம் நாள் மண்டல பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் யாக சாலை அமைத்து பல்வேறு வழிபாடுகள் நடந்தன. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தினர். மண்டல பூஜை நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி புறப்பாடாகி தேரடி வீதிகள் வழியே நகரை வலம் வந்தார். ஏற்பாட்டினை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.