ஆடி கடைசி சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1120 days ago
கோவை : கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.